உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் குறித்த முக்கிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் 111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய பிரபல டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை நேரில் காண்பதற்காக கடந்த ஜுன் 18 ஆம் திகதி சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்ற டைட்டன் நீர்மூழ்கியானது ஆழ்கடலில் ஏற்பட்ட அமுக்கம் காரணமாக வெடித்துச் சிதறியது.
இவ்விபத்தில் குறித்த நீர்மூழ்கியில் பயணித்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்திருந்தது.
இந்நிலையில் குறித்த நீர்மூழ்கி காணமற்போன நாளில் இருந்து அது குறித்த மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் 114 நாட்களுக்குப் பிறகு தற்போது நீர்மூழ்கியின் சில பாகங்களும், மனிதனின் உடல் சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.