ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கூட்டு பொருளாதார சபையை அமைப்பதற்கு இலங்கை முன்மொழிந்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான அமைச்சர் அஹமட் பின் அலி சயேக் ஆகியோருக்கிடையில் அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் குறித்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடுகளை அதிகரிப்பதாகவும்;, பொருளாதார கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.