காசா பகுதியில் உள்ள தமது 92 பாடசாலைகளில் கிட்டத்தட்ட 218,600 பேர் தஞ்சமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பலர் அரச பாடசாலைகள் மற்றும் பிற கட்டிடங்களில் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் மொத்தத்தில், குறைந்தது 340,000 பாலஸ்தீனியர்கள் காசா முழுவதும் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது.
காசாவில் தண்ணீர், எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ஐநாவின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் 560 வீடுகள் கடுமையாக சேதமடைந்து வாழத் தகுதியற்ற நிலையில் இருப்பதாகவும் குறைந்தது 12,600 வீடுகள் சேதம் அடைந்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக பிராந்தியத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் 13 ஓரளவு மட்டுமே செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தம்மீதான தாக்குதலை அடுத்து இஸ்ரேல் நீர் விநியோகத்தை நிறுத்திய நிலையில் 2.3 மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியில் 6,50,000க்கும் அதிகமான மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மேலும் கழிவுநீர் கால்வாய்கள் அழிக்கப்பட்டு, அவர் தெருக்களில் தேங்கி கிடைப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் ஐநாவின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.