தெற்கு அதிவேக வீதியின் இமதுவ மற்றும் பின்னதுவ பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள போதிலும், தெற்கு அதிவேக வீதியின் பயணிகள் போக்குவரத்து பஸ் சேவைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பஸ்கள் இமதுவ நுழைவாயிலில் இருந்து வெளியேறி பின்னதுவ நுழைவாயிலிலும், கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி செல்லும் பஸ்கள் பின்னதுவ நுழைவாயிலிலிருந்து வெளியேறி இமதுவ நுழைவாயிலில் இருந்து மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. .