நான்கு வருடங்களுக்கு முன்னர், மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஈரான் நாட்டைச் சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குற்றவாளிகள் 9 பேரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி அக்குறள பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.