இஸ்ரேலின் ஸ்டெரோட்டில் மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது 5 பேர் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இஸ்ரேலிய மருத்துவர்களை மேற்கோளிட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இடம்பெற்ற தாக்குதலுக்கு ஹமாஸ் போராளிகள் அமைப்பு பொறுப்பேற்றிருந்தது.