வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது” இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.
அத்துடன் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதையும், சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் ”இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவிலான மழை பெய்யும் என்றும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.