• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் உலக அமைதிக்கு சீர்குலைவு : ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

இஸ்ரேல் – ஹமாஸ் போரினால் உலக அமைதிக்கு சீர்குலைவு : ஸ்ரீகாந்தா தெரிவிப்பு

Kavipriya S by Kavipriya S
2023/10/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரினால் உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இன்று என்.ஸ்ரீகாந்தா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையில் இப்போது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போரில், காசா பிரதேசத்தில் வாழும் பலஸ்தீன மக்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டும், காயப்படுத்தப்பட்டும் வருகையில், அப்பிரதேசம் தண்ணீர் மற்றும் மின்சாரமின்றி திணறிக் கொண்டிருக்கின்றது.

மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி ஒன்று, காசாவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டிலும் பொதுமக்களின் உயிரிழப்புக்களும் பாதிப்புக்களும் உயர்ந்து வருகின்றன.

இப்பொழுது நடைபெறுவது இஸ்ரேலின் அரச பயங்கரவாதத்திற்கும், பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய ஹமாஸ் இயக்கத்தின் பயங்கரவாதத்திற்கும் இடையிலான போர் என்பதே உண்மையானது.

இஸ்ரேலுக்குள் ஊடுருவித் தாக்கிய ஹமாஸின் போர் நடவடிக்கையை சாட்டாக வைத்து, அதன் கட்டுப்பாட்டில் உள்ள காசா பிரதேசத்தையே தரைமட்டமாக்கி, இரு துண்டுகளாக அமைந்திருக்கும் பலஸ்தீன மண்ணின் ஒரு துண்டினை ஒட்டுமொத்தமாக விழுங்கிவிடும் இலக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு, அமெரிக்காவும் மற்றும் மேற்குலக நாடுகள் பலவும் உதவிக் கொண்டிருக்கும் நிலைமையில், உலக அமைதியின் எதிர்காலமே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

1948ல் இஸ்ரேலின் தோற்றத்துடன், தமது சொந்த பலஸ்தீன மண்ணிலிருந்து வேட்டையாடி விரட்டப்பட்ட பலஸ்தீன மக்களின் நீதிக்கான நீண்ட போராட்டத்தில், 1993ல் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனின் மத்தியஸ்தத்துடன், இஸ்ரேலிய பிரதமர் யிற்சாக் றபினுக்கும், பலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யசிர் அரபாத்துக்கும் இடையில் கையெழுத்தான சமாதான ஒப்பந்தம், பலஸ்தீன மண்ணில், யூதர்களுக்கு இஸ்ரேலும், பலஸ்தீனிய அரபுக்களுக்கு பலஸ்தீனமும் என, இரண்டு நாடுகள் அருகருகாக அமைவதற்கு வழிகாட்டி, ஓர் வரலாற்று ஆச்சரியத்தையே நிகழ்த்தியிருந்தது.

ஆனால், படுகொலை செய்யப்பட்ட பிரதமர் இற்சாக் றபினுக்குப் பிறகு, ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இஸ்ரேலிய தலைவர்களின் நடவடிக்கைகளால், அந்த சமாதான ஒப்பந்தம் செயல் இழந்து போனதால் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையின் உச்சக்கட்டமே, இப்போது நடைபெறும் போராகும்.

இந்தப் போரில் தலையிட்டு, போர் நிறுத்தம் ஒன்றினை சாதிக்கும் வல்லமை கொண்டுள்ள நாடுகள் எல்லாம், இஸ்ரேலின் பக்கமே இப்போது சாய்ந்து நிற்கின்றன.

Related

Tags: #ATHAVAN #ATHAVANNEWS #UPDATE#today #srilankanews #todaynews
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

Next Post

சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா!

Related Posts

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!
இலங்கை

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

2026-11-02
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
இலங்கை

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

2026-11-02
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!
இலங்கை

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

2026-11-02
ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!
ஈரான்

ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்!

2026-11-02
33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!
இலங்கை

33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு!

2026-11-02
O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!
இலங்கை

O/L பரீட்சை மாணவர்களுக்கான மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் கையேடு வெளியீட்டு நிகழ்வு!

2026-11-02
Next Post
சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா!

சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா!

அமெரிக்கத் துணைச் செயலாளருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

அமெரிக்கத் துணைச் செயலாளருக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பில் மாற்றம்!

இந்திய வெளிவிவகார அமைச்சரின் பாதுகாப்பில் மாற்றம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

மிகக் கடுமையான சூறாவளியாக மாறிய ‘அர்னாப்’ – பலத்த மழை எச்சரிக்கை!

2026-10-27
எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

எந்தவொரு நாட்டுத் தலைவரும் மக்கள் மீது இவ்வாறு வரி சுமத்தியதில்லை – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றச்சாட்டு!

0
மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

மலையக மக்களின் நலனுக்காக பல புரட்சிகரமான முன்னெடுப்புகள்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

0
மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

மத்திய மாகாணத்தில் சர்வதேச முதலீடுகளை ஈர்க்க புதிய முயற்சி!

0
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

செண்பகவல்லி அம்மன் தேரோட்டம் – நான்கு ரத வீதிகளிலும் உலா!

2026-11-02
தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

தீபாவளியின் போது டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க அனுமதி!

2026-11-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: