5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் இன்று (ஞாயிற்க்கிழமை) நடைபெறவுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு 3,37,596 மாணவர்கள் தோற்றவுள்ளதோடு 2,888 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மாணவர்கள் முதலில் இரண்டாவது வினாத்தாளுக்கு விடையளிக்க வேண்டுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்தார்.
அத்துடன் அனர்த்தங்கள் அல்லது அவசர நிலை காரணமாக பரீட்சை நிலையத்திற்கு வர முடியாத மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.