எரிபொருளுக்கான QR முறையை மீண்டும் அறிமுகப்படும் என சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.
QR முறையை மீள அறிமுகப்படுத்துவது தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகத்தின் போது முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட QR முறை செப்டம்பர் முதலாம் திகதி முதல் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.