ஹமாஸைக் கண்டிக்க வேண்டும் என்ற மேற்கத்திய அழுத்தங்களை மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.
மேலும் ஆயுதக் குழுவுடன் தனது அரசாங்கம் தொடர்ந்து உறவுகளைப் பேணும் என்றும் மலேசியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஹமாஸைக் கண்டிக்குமாறு மேற்கத்திய அதிகாரிகள் பலமுறை மலேசியாவிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஆனால் அவர்களின் அணுகுமுறையை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.