இஸ்ரேல் – ஹமாஸ் படையினருக்கு இடையேயான போர் கடந்த 11 நாளாக இடம்பெற்று வரும் நிலையில் நாளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலேயே பைடன் இஸ்ரேலுக்கு பயணம் செய்யவிருப்பதாகவும் அதன்பின்னர் ஜோர்டானில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதன்போது பாலஸ்தீனம், எகிப்து ஜனாதிபதிகளையும், ஜோர்டன் மன்னர் அப்துல்லா ஆகியோரையும் பைடன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.