காஸா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடாத்தப்பட்ட விமானப் படை தாக்குதலில் 500ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலை இஸ்ரேல் நடாத்தியுள்ளதாக ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சுமத்தியுள்ளது.
எனினும், இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்ற மற்றொரு குழுவால் இந்த தாக்குதல் தவறுதலாக நடாத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
இதேவேளை இஸ்ரேலிய இராணுவ எச்சரிக்கைகளுக்குப் பின்னர் சுமார் 600,000 பாலஸ்தீனியர்கள் வடக்கு காஸா பகுதியிலிருந்து தெற்கே வெளியேறியுள்ளனர் மேலும் ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காஸாவிற்கான அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் தடை செய்துள்ளதாக குறிப்பிடத்தக்கது