ஆயுதப் போராளியாக ஒருகாலத்தில் செயற்பட்ட தான் பேச்சுவார்த்தைகள் மூலமே தமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பததை புரிந்து கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு செயற்பட்டு வருவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சீனாவில் இடம்பெற்ற கடலசார் ஒத்துழைப்பிற்கான கருப்பொருள் எனும் தொணிப் பொருளில் கடந்த 18 ஆம் திகதி சீனாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பெல்ட் அன் றோட் எனப்படும் சீனாவினால் உருவாக்கப்பட்டு வருகின்ற சர்வதேச தொடர்பாடல் முயற்சியின் ஓரு பகுதியாக இடம்பெற்ற குறித்த மூன்றாவது சர்வதேசக் கலந்துரையாடலில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற சீன ஜனாதிபதியின் கருத்தினை நிரூபிக்கும் வகையில் தன்னுடைய அரசியல் பயணம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.