டயனா கமகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அடிப்படையறது என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் சபையில் இல்லாதபோது, டயனா கமகேவினால், எமது உறுப்பினர் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நாம் சபாநாயகரை சந்தித்தோம்.
காணொளியையும் காண்பித்துள்ளோம். இதன்போது, யார் அநாகரீகமாக நடந்துக் கொண்டது மற்றும் யார் கைப்பையினால் தாக்குதல் நடத்தியது என்பதை சபாநாயகரிடம் தெளிவாகக் காண்பித்துள்ளோம்.
இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறும் கூறியுள்ளோம்.இந்த குற்றச்சாட்டை மறுக்கிறோம். நாடாளுமன்றதிற்கு உள்ளே நடந்த பிரச்சினையென்பதால், சபாநாயகர் இதற்கான தீர்வினை வழங்க வேண்டும்” என கூறியுள்ளார்.