வர்த்தகர் லலித் கொத்தலாவலவின் மரணத்திற்கு சளி மற்றும் நிமோனியா நிலைமை மோசமடைந்தமையே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவலயின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக அவரது குடும்பத்தினரால் பம்பலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சடலத்தை பிரேத பரிசோதனை செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அதற்கிணங்க மூவர் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழுவினர் நேற்று பிரேத பரிசோதனை நடத்தினர்.
கொழும்பு வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுமார் 3 மணித்தியாலங்கள் பிரேதப் பரிசோதனை இடம்பெற்றது.
குறித்த நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், சளி மோசமடைந்ததால் ஏற்பட்ட நிமோனியா காரணமாகவே லலித் கொத்தலாவல உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.