தெற்கு காசாவில் உள்ள மூன்று முக்கிய மருத்துவமனைகளுக்கு மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
இருப்பினும் வடக்கு பகுதிக்கு மேலும் நிவாரணங்கள் சென்றடைய வேண்டியுள்ளதாக கிழக்கு மத்தியதரைக் கடல் பிராந்தியத்திற்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் கூறியுள்ளார்.