பேரழிவிற்கு மத்தியில் பெருகிவரும் இறப்பு எண்ணிக்கையை நிறுத்துமாறு பிரித்தானியாவை தளமாக கொண்ட சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
மேலும் முக்கியமான உதவிகள் காசாவை அடைவதை உறுதி செய்ய, உடனடி போர்நிறுத்தம் அவசியம் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றங்கள் உட்பட சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினராலும் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
இஸ்ரேலிய தரைவழித் தாக்குதல் காசா மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதனால் உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளது.
காசா மீதான 16 ஆண்டுகால முற்றுகையை முடிவுக்கு கொண்டு வரவும், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து பணயக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.