அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மருந்துகள் மற்றும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அழைப்பு விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டமொன்றை உருவாக்குவதற்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்வனவு செய்வதற்கான திட்டத்தை வகுப்பதற்கான முடிவிற்கு அதிகாரிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆட்சேர்ப்பு மற்றும் இடமாற்ற நெறிமுறைகளை மறுசீரமைக்க அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளதால் வைத்தியசாலைகளில் உள்ள விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை குறித்தும் இதன்போது விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.