ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் இன்று காலை நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜெனினில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஆயுதக் குழுவான ஜெனின் பட்டாலியனின் போராளி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 110 ஆக அதிகரித்துள்ளது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் மேற்குக் கரை முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றிவளைப்புகளின் போது ஒரு பெண் உட்பட குறைந்தது 19 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி காசாவுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர்.