இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலத்தை நாளைய தினம் நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே இடம்பெற்ற மோதல்களின் போது களனி பகுதியைச் சேர்ந்த அனுலா ரத்நாயக்க என்ற பெண் உயிரிழந்தர்.
உயிரிழந்த குறித்த பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அவரின் பூதவுடல், நாளை காலை நாட்டை வந்தடையும் என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், மோதலின் போது காணாமல் போன மற்றைய இலங்கையர் உயிரிழந்துவிட்டாரா என்பதைக் கண்டறியும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, அவரது பிள்ளைகளின் னுNயு மாதிரிகளைப் பயன்படுத்தி அந்த உறுதிப்படுத்தல்கள் செய்யப்படும் எனவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.















