எச்.ஐ.வி. உள்ளிட்ட பாலியல் நோய்களைக் கண்டறியும் வகையில் தொலைபேசி செயலி ஒன்றை அறிமுகப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செயலி Know Four Sure எனப் பெயரிடப்பட்டுள்ளதாக பாலியல் மற்றும் எச்.ஐ.வி. தடுப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபதிரன தெரிவித்துள்ளார்.
இந்தி செயலியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பிதிலளிப்பதன் மூலம், அந்தப் பதில்களின் அடிப்படையில் பயனருக்கு HIV தொற்று உள்ளதா? என்பது தொடர்பாக அறிந்துகொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.
டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் HIV தொற்றை கண்டறிவதற்கு பரிசோதனை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை 011 26 96 433 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் வைத்தியர் ஜானகி விதானபதிரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.