அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் நாடளாவிய ரீதியில் இன்று (30) நண்பகல் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரியே இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இப்போராட்டங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன கருத்துத் தெரிவிக்கையில்” எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு பின்னர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதே வேளை நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் (31) தமது சேவையிலிருந்து விலகி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.