வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட வட மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விடயம் குறித்து, பிரதமரோடு கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், வட மாகாணத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கும் போது தமிழ் மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, எதிர்வரும் வாரங்களில் இவை நடைமுறைக்கு வரும் என பிரதமர் உறுதியளித்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.