அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண நுகர்வோர் அதிகாரசபை சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைவாக சிவப்பு மற்றும் வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 220 ரூபாவாகவும் கீரி சம்பா ஒரு கிலோ கிராம் 260 ரூபாவாகவும் சம்பா ஒரு கிலோ கிராம் 230 ரூபாகவும் சிவப்பு மற்றும் வெள்ளை பச்சை அரிசி 210 ரூபாவாகவும் அரிசிகளுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், அந்த விலையை விட அதிகளவு அரிசியை வியாபாரிகள் விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
இதற்கமைவாக அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
அரிசியை மறைத்து வைத்திருக்கும் வியாபாரிகள் தொடர்பிலும் குறித்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அதிகாரசபை அறிவித்துள்ளது.