பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரிப்பது வரி சூத்திரத்தை குழப்பியடிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிற்போக்கான வரி அதிகரிப்பில் இந்நாட்டின் சாதாரண வறிய மக்களும், உழைக்கும் மக்களும் பெரும் வரிச்சுமைக்கு ஆளாவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வினைத்திறன் இன்மை மற்றும் மோசமான அரச நிர்வாகச் செயற்பாடுகள் அரசாங்கத்தின் பலவீனத்தை எடுத்து காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எந்த மக்கள் ஆணையும் இல்லாமல் 220 இலட்சம் பேர் மீது எவ்வாறு வரிச்சுமையை சுமத்துவது சரியா என்றும் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளக்கிளர்.