டீசல் விலை உயர்த்தப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இம்முறை கட்டண திருத்தம் இடம்பெறாவிட்டாலும் எதிர்காலத்தில் டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படும் என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் டீசல் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இவ்வருடம் கட்டண திருத்தம் இடம்பெறாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் போக்குவரத்து ஆணைக்குழுவும் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் தற்போது கட்டணங்களை திருத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 9 ரூபாயால் குறைக்கப்பட்ட போதும், முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது என முச்சக்கரவண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.