புதுடெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமுலாக்கத் துறையினரால் அனுப்பப்பட்ட அழைப்பாணை சட்டவிரோதமானது எனவும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அமுலாக்கத்துறை அழைப்பான் விடுத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறாக அத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பா.ஜ.க.வின் வலியுறுத்தலின்படி 4 மாநிலத் தேர்தலில் தான் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறித்த அழைப்பான் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் தனக்காக அழைப்பானை அமுலாக்கத் துறை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.