ஹமாஸின் தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் அளிக்கும் வகையில் ஸ்பாஞ்ச் குண்டுகளை பயன்படுத்த இஸ்ரேல் இராணுவம் தீர்மானித்துள்ளது.
காஸாவில் சுமார் 20 ஆண்டுகள் கடுமையாக முயன்று பூமிக்குள் வலைப்பின்னல்களைப் போல ஹமாஸ் உருவாக்கி வைத்துள்ள சுரங்கங்களில் இருந்து போராளிகள் வெளியே வந்து எதிர்பாராத கொரில்லா தாக்குதல் நடத்தினால் தங்கள் தரப்பில் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படும் என்ற அச்சத்தினாலேயே அஸ்ரேல் இராணுவத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.