இலங்கையின் வடக்கு மாகாணத்தினுடைய கடல் வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களை சீனாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் தாம் சுதந்திரமாக தொழிலில் கடற்றொழிலில் சுதந்திரமாக ஈடுபட முடியாது உள்ளதாகவும் முன்னாள் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசங்களின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா விசனம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய வளங்களும், வாழ்வாதாரங்களும், சீன நாட்டுக்கு விற்கப்பட்டு சீன அரசாங்கம் எங்களுடைய இருப்பையே கேள்விக்குறியாக்குகின்ற நிலையில் இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் வடகிழக்கு கடலிலே நாங்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு எங்களுடைய வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.