சர்வதேச காலநிலை பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்க கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய பகுதியில் 600 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கவும், பசுமை பொருளாதார மாற்றத்திற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற முதலாவது சர்வதேச காலநிலை மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்தில் காலநிலை செழிப்புத் திட்டத்தை முன்வைத்திருந்த தான் இவ் வருடத்துக்கான கோப் 28 மாநாட்டில், நிகர பூஜ்ஜிய உமிழ்வுத் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.