ஐக்கிய நாடுகளின் உறுப்பினராக சீனா இலங்கைக்கு உதவி செய்வதற்கு முன்னிற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டை பொருளாத நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் நட்பு ரீதியிலான ஆதரவையையும் சீனா எமக்கு வழங்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் சீனாவிற்கு நன்றி செலுத்துவதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
பங்கரவாதத்தின் மூலம் முழு உலகமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இலங்கைக்கு தொழிநுட்ப வளர்ச்சியே தேவைப்படுகின்ற நிலையில் லங்கையை தொழிநுட்ப வளர்ச்சிக்கு கொண்டு செல்வதற்கான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் சீனா அறிவித்துள்ளது.
எனவே, ஆசியாவின் பாதுகாப்பிற்கு சீனாவின் ஆதரவு மிகவும் பலத்தை அளிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.