கடந்த சில மணித்தியாலங்களில் தெற்கு காசா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல்களால் அல்-சப்ரா பகுதியில் உள்ள அலி பின் அபி தாலிப் மற்றும் அல்-இஸ்திஜாபா என்ற பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் காசாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து முந்தைய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள பாடசாலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த அகதிகள் முகாம் கடந்த நாட்களில் மூன்று முறை தாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த புதிய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
அத்தோடு முற்றுகை நடவடிக்கைக்கு மத்தியில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சோலர் பொனல்கள் மற்றும் ஜெனரேட்டர்களை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக காசாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.