நேபாளத்தில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
காத்மாண்டுவில் இருந்து 169 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் நேபாளத்தில் ரிக்டரில் 6.4 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலநடுக்கம், டெல்லி-என்.சி.ஆர்., உத்தர பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய வடஇந்திய பகுதிகளிலும் உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் இன்று நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது,