இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
விளையாட்டு அமைச்சின் பாதகமான செயற்பாடுகளினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அன்றாட செயற்பாடுகள் சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இது தொடர்பில் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அறிவிப்பதற்கும் ஜனாதிபதியுடனான சந்திப்பு அவசியம் என்றும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதியை விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையிலுள்ள அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை கருத்திற்கொண்டு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.