விகாரமஹா தேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு ஒப்படைக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கையகப்படுத்தப்பட்ட ஏனைய சொத்துக்களை உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டில் இருந்த விகாரமஹாதேவி பூங்கா 2011ஆம் ஆண்டு திருத்த வேலைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டது.
விகாரமஹா தேவி பூங்கா திருத்த வேலைகள் செய்யப்பட்டு பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், சிறு புனரமைப்பு பணிகளை முடிப்பதற்கு குறித்த பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு மாற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.