இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான மோதல் காரணமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச கவனம், திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்தும் ரஸ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது ஆனால் இஸ்ரேல் மற்றும் காஸா மோதல் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேசத்தின் கவனம் உக்ரேன் மீது திரும்பவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பினை மேற்கொண்ட ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக உக்ரைன்; போர் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக உயர்மட்ட இராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்த கருத்தை தான் நிராகரிப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார்.