வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் அடக்குமுறைகளிற்கு எதிராக வவுனியாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டமானது இன்று காலை தமிழரசுக்கட்சியினரால் வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு பகுதிகளில் நில அபகரிப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும், மயிலத்தமடுமேச்சல் தரையில் ஏற்ப்படுத்தப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை அகற்ற வேண்டும் போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியும் கோசங்களையும் எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறிதரன், இரா.சாணக்கியன், தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ந.கருணாநிதி, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது,