இலங்கை தமிழகம் கேரளா ஆகிய இடங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே சீனாவின் பிரதான நோக்கம் என ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்.
ஐனநாயக போராளிகள் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது மக்களின் இருப்பு அவர்களின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு சீனக் குழுவின் வருகையை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்து சமுத்திரத்தின் பலமான பாக்கு நீரிணையின் இரு கரைகளிலும் ஈழத்தமிழர்களும் தமிழக தமிழர்களும் கேரளமும் தங்கியுள்ளதே இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு உத்தரவாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாக்குநீரிணையை தன்வசப்படுத்துவதற்கான வேலைகளையே தற்போது சீனா முன்னெடுத்து வருகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி மேலும் தெரிவித்துள்ளார