இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறைவடைந்ததன் பின்னர் பாலஸ்தீனியத்தின் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட ஒரு பகுதியாக காசா இருக்க வேண்டும் என துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
காசா தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளதுடன் ஹமாஸ் நாட்டு மக்களை தொடர்ந்தும் துருக்கி ஆதரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் 1967 எல்லைகளுக்கு இணங்க, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை பிராந்திய ஒருமைப்பாட்டுடனன் காண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.