கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.
அதற்காக இன்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.
இதேநேரம் நாளை சிவில் நடைமுறைச் சட்ட திருத்த சட்டமூலம் மற்றும் நீதிமன்றம், நீதித்துறை அதிகாரம் அல்லது நிறுவனத்தை அவமதித்தல் தொடர்பான சட்டமெல்லாம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
அத்துடன், எதிர்வரும் 10ஆம் திகதி மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்கள் மீது விவாதம் நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகியன விவாதிக்கப்பட உள்ளன.
இதேவேளை, அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட உரை 13 திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.