இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று ஆரம்பமானபோது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால், உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 45 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் பிரியந்த ஜயவர்தன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.