பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகள் கிடைக்காத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை முதல் பொதுசுச் காதார பரிசோதகர்களினால் வழங்கப்படும் அனைத்து அறிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மேம்பாட்டு மதிப்பாய்வு உட்பட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்பது இடைநிறுத்தப்படும் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் அனைத்து தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்தும் விலகி செயற்படவுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் அனைத்து களப்பணிகளில் இருந்தும் விலகி செயற்படவுள்ளதாகவும், டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்தவுள்ளதாகவும் இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.