வேண்டுமென்றே அரசியலமைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீறுவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் அடிப்படையில் இன்று பொலிஸ்மா அதிபர் இல்லை என்பதை சுட்டிக்காட்டி கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பை மீறியுள்ளார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வர முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறி பதவி நிறைவுபெற்ற, பொலிஸ்மா அதிபருக்கு பதவி நீடிப்பை வழங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் தற்போது சட்டத்தின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபர் ஒருவர் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.