“கசினோ உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை” என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மதுபானம் மற்றும் கசினோ நிறுவனங்கள் மீது அரசாங்கம் அதிக வரிகளை விதித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.