விளையாட்டுச் சட்டத்தை மாற்றாமல் இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விளையாட்டுச் சட்டத்தை மாற்றியமைக்காமல், இலங்கை கிரிக்கெட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.
சூதாட்டக்காரர்களும், ஊழல்வாதிகளும் இதில் நுழைவதை நிறுத்த வேண்டும். கிளப் மாபியாவை இல்லாது செய்ய வேண்டும்.
அப்போதுதான், சிறப்பான நிர்வாகக் குழுவை ஸ்தாபித்து, கிரிக்கெட்டை முன்னேற்ற முடியுமாக இருக்கும்.
இதற்குள் அரசியலும் மூக்கை நுழைக்கிறது.
கிராமத்தில் உள்ளவர்களும் கிரிக்கெட் அணிக்குள் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.