அமெரிக்க இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் இராணுவ வீரர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(13) கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிபொருள் நிரப்பும் போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















