இந்தியா பொருளாதார ரீதியில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக இங்கிலாந்து பயணித்துள்ள அவர், லண்டனில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தியா பொருளாதார ரீதியிலும் தலைமைத்துவத்திலும் பாரிய வளர்ச்சியடைந்து வருவதாகவும் தொலைநோக்கு பார்வைக் கொண்டு செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.