சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அடுத்த சில தினங்களில் சீனியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சீனி பதுக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் கண்டறிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.