காசாவில் உள்ள மருத்துவமனைகள் தற்போது கல்லறைகளாக மாறிவிட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் காசாவில் 38 நாட்களாக இடம்பெற்றுவரும் யுத்தத்தினால் 12 ஆயிரத்தி 500 ற்கும் மேற்பட்டடோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காசாவில் உள்ள சிறுவர்கள் மருத்துவமனை ஒன்றின் அடித்தளத்தை ஹமாஸ் அமைப்பினர் ஆயுதக் கிடங்கை வைத்துள்ளதாகவும் அதில் பயனாய் கைதிகள் இருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
மேலும், வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு மத்திய காசாவில் பொதுமக்களின் வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்கூட்டிய குழந்தைகள் உட்பட இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் குவிந்திருப்பதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.